Friday, December 1, 2017

சுற்றளவுகள்

கடந்தகால வினாக்கள் :

2013 (GCE O / L)

நகரின் நடுவில் தற்போது அமைக்கப்பட்டுவரும் ஒரு குளத்தின் அடியின் பரும்படிக் கிடைப்படம் உருவில் காணப்படுகிறது. அது ஒரு சதுரத்தையும் ஒரு வட்டத்தின் ஓர் ஆரைச்சிறையையும் கொண்டுள்ளது. 𝜋=22 / 7 எனக் கொள்க. அடியின் சுற்றளவைக் காண்க.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

2011 (GCE O / L)

வலைப்பந்தாட்டத்திற்கு பயன்படுத்தப்படும் செவ்வக வடிவமுள்ள மைதானத்தின் பரும்படிப் படம் உருவில் காணப்படுகின்றது , அம் மைதானத்தின் சுற்றளவைக் காண்க.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

2006 (GCE O / L)
ஒரு பெரிய அரைவட்டத்தின் விட்டத்தின் மீது ஒவ்வொன்றும் 7cm ஆரை உள்ள இரண்டு அரைவட்டங்கள் இருக்குமாறு உரு வரையப்பட்டுள்ளது.

I. அரைவட்டங்களின் நீளங்களை வெவ்வேறாகக் கண்டு இவ்வூருவின் சுற்றளவூ பெரிய வட்டத்தின் பரிதிக்கு சமமெனக் காட்டுக.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 2005 (GCE O / L)
20cm நீளமும் 14cm அகலமும் உள்ள ஒரு செவ்வகத் தகட்டிலிருந்து உருவில் காணப்படுகின்றவாறு அரைவட்ட வடிவங்களை நீக்குவதன் மூலம் ஓர் இலட்சினை அமைக்கப்பட்டுள்ளது. உருவில் இலட்சனைக்குறிய பகுதி நிழற்றப்பட்டுள்ளது.

1.    ஒரு சிறிய அரைவட்டத்தின் ஆரை யாது?
2.    இலட்சினையின் சுற்றளவைக் காண்க.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 2004 (GCE O / L)

வரிப்படத்தில் காணப்படுகின்றவாறு ஒரு செவ்வகக் காணித் துண்டிலே ஓர் அரைவட்டப் பூப்பாத்தி அமைக்கப்பட்டு எஞ்சியூள்ள காணிப் பகுதியில் புல் வளர்க்கப்பட்டுள்ளது.

i. செவ்வகக் காணித் துண்டைச் சுற்றி ஒரு முட்கம்பி வேலியை அமைக்கும் போது அதற்குத் தேவையான முட்கம்பியின் ஒரு வரியின் நீளத்தை காண்க.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

 2003 (GCE O / L)

உருவில் ஒரு சதுரத் தகடு ABCD காணப்படுகிறது. A,D ஆகியவற்றை மையங்களாகக் கொண்டு இரு ஆரைச் சிறைகளும் BC ஐ விட்டமாகக் கொண்டு ஓர் அரைவட்டமும் தகட்டிலிருந்து வெட்டி அகற்றப்படுமெனின் நிழற்றப்பட்டுள்ள மீதிப் பகுதியின் சுற்றளவைக் காண்க.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
2003 (GCE O / L)-2

1 சென்றிமீற்றரினால் 20 மீற்றர் காட்டப்படும் அளவிடைக்கு வரையப்பட்ட ஒரு செவ்வக மைதானத்தின் அளவிடைப் படம் இங்கே காணப்படுகின்றது.

I. மைதானத்தின் நீளத்தையூம் அகலத்தையூம் காண்க.

II. மைதானத்தைச் சுற்றி ஒரு முட்கம்பி வேலி அமைக்கப்பட்டிருப்பின் அதில் உள்ள முட்கம்பி வரி ஒன்றின் நீளத்தைக் காண்க.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 2002 (GCE O / L)
ஒரு பக்கத்தின் நீளம் 24 CM ஆன சதுரத் தகடு ஒன்றிலிருந்து ஒவ்வொன்றும் 7cm ஆரையூள்ள 4 அரை வட்டப் பகுதிகள் உருவில் காணப்படுகின்றவாறு வெட்டி நீக்கப்பட்டுள்ளன. அவ்வூருவின் சுற்றளவைக் காண்க.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 2011 (GCE O / L) -SUPPORTING SEMINAR
படத்தில் காட்டப்பட்டுள்ள வட்டப்பகுதியினது நீளம் 33cm ஆகும். அதனது ஆரையைக் காண்க.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 2010 (GCE O / L) -SUPPORTING SEMINAR

 செவ்வக மைதானமும் அதன் ஒரு அகலப் பக்கத்தில் அமைந்துள்ள அரைவட்ட பூப்பாத்தியூம் அமைந்துள்ள முறையூம் படத்தில் காட்டப்பட்டுள்ளன.

i.   மைதானத்தில் பூப்பாத்தியூடன் கூடிய மொத்த நிலப்பகுதியின் சுற்றளவைக் காண்க.

No comments:

Post a Comment